பாடியநல்லூர் ஊராட்சியில் ரூ.11.58 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலைப்பணி

புழல்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மொண்டியம்மன் நகர், மேட்டுப்பகுதி பெரியார் தெரு மற்றும் பி.டி மூர்த்தி நகர், அண்ணா தெரு ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக சாலை பணிகள் நடைபெறாமல் இருந்தது. இதனால், மழை காலங்களில் அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இவ்வாறு, பாதிப்புக்குள்ளான அப்பகுதி மக்கள், பாடியநல்லூர் ஊராட்சியில் சாலையை சீரமைக்க வேண்டும் என்று சோழவரம் ஒன்றிய குழு துணை தலைவர் கருணாகரனிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

இக்கோரிக்கையின்படி, பாடியநல்லூர் ஊராட்சியில் புதியதாக பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக, 15வது மானிய ஒன்றிய நிதியிலிருந்து 11 லட்சத்து 58 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றிய குழு துணை தலைவருமான வே.கருணாகரன் கலந்துகொண்டு,

பாடியநல்லூர் ஊராட்சி மொண்டியம்மன் நகர் மேட்டுப்பகுதி பெரியார் தெரு மற்றும் பி.டி மூர்த்தி நகர் அண்ணா தெரு ஆகிய 2 பகுதிகளில் ரூ.11.58 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். அப்போது, சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்களிடம் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் சோழவரம் தெற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

திருவனந்தபுரத்தில் மேலும் 2 பேருக்கு அமீபா காய்ச்சல்

முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது; 2027ல் உபி பாஜ அரசு அகற்றப்படும்: சமாஜ்வாடி எம்எல்ஏ பரபரப்பு பேச்சு

40 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு; காஷ்மீரில் இன்று இறுதிகட்ட தேர்தல்: வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு