நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு..!!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் வசிப்பவர்கள் 22 முகாம்களில் நெல்லையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சுமார் 4500 பேர் இந்த முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முகாம்களில் தங்கி இருப்பவர்களை சந்தித்து வருகிறார். பள்ளிக்கூடத்தில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நெல்லை மாநகர பகுதியை சேர்ந்தவர்களிடம் அவர் நலம் விசாரித்தார். அதே போல் அவர்களுக்கு அங்கு போதுமான உணவு உடைகள் வழங்கப்பட்டு வருகிறதா? என்ன குறை இருக்கிறது என்பதை அவர் கேட்டறிந்தார்.

தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கிறோம் எங்களுக்கு நிரந்தரமாக வீடுகட்ட உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். உணவு, உடை அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினர். இதனை அடுத்து அவர் நெல்லை மாநகரத்தில் மற்றொரு இடத்தில் உள்ள முகாமுக்கு செல்ல இருப்பதாக திட்டமிட்டுள்ளார். அதனை அடுத்து நெல்லை மாநகராட்சியில் அதிகாரிகள் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!