எலுமிச்சை தொக்கு

தேவையானவை:

எலுமிச்சைப்பழம் – 12,
கல் உப்பு – தேவைக்கு,
மிளகாய்த்தூள் – 3 டேபிள் ஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
வெந்தயம்,
பெருங்காயம் (வறுத்துப் பொடித்தது) – 1 டீஸ்பூன்.

செய்முறை:

எலுமிச்சைப் பழங்களை நன்றாகக் கழுவி துணியில் துடைத்து சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதிலுள்ள விதைகள் எல்லாம் எடுத்துவிட்டு ஒரு ஜாடியில் போட்டு உப்பைப் பொடித்து அதோடு கலக்கவும். 2 அல்லது 3 நாட்களுக்குப் பின் எலுமிச்சைத் துண்டுகளோடு மிளகாய்த்தூளையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். நன்றாக அரைத்தப்பின் ஜாடியில் போடவும். வாணலியை அடுப்பில் வைத்துக் காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கவும். நன்றாக ஆறியபின் தாளித்த கடுகை ஜாடியில் போட்டு, பெருங்காயம், வெந்தயப்பொடியையும் சேர்த்து நன்றாகக் கலக்கி வைக்கவும். இந்த எலுமிச்சை தொக்கை சாப்பாட்டில் சேர்த்துக் கொண்டால் உடம்புக்கு ரொம்ப நல்லது.

Related posts

விநாயகர் சதுர்த்தி: கொழுக்கட்டை ஸ்பெஷல்

காளான் பாஸ்தா

பிரட் ட்ரை குலாப் ஜாமூன்