விளம்பரம் பார்த்தால் பணம் என நூதன மோசடி நீதிமன்றத்தில் சரணடைந்த நிதி நிறுவன உரிமையாளர்

சென்னை: மை வி3 ஆட்ஸ் செயலியில் வீடியோ பார்த்தால் 5 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரும் என கூறி வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக கோவை சைபர் க்ரைம் போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகார், சென்னை பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிட்டிருந்தது.

இதன்படி, சக்தி ஆனந்தன், சிறப்பு நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு நேற்று சரணடைந்தார். அவரை 19ம்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையில், ஜாமீன் கோரி சக்தி ஆனந்தன் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை வரும் 9ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை