ஆந்தையின் பார்வைத் திறன்

ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டிகள், பூச்சிகள் மற்றும் ஏனைய பறவைகளை வேட்டையாடும். ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும், காதுகளையும், கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளவை. மேலும் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும், அவற்றின் கண்கள் அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளதால் பார்வைத் திசையை மாற்றுவதற்கு தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது.

இது தனது தலையை இரு திசைகளிலும் 270 டிகிரி வரை திருப்ப வல்லது. ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவை என்பதால் அவற்றின் கண்களுக்கு சில அங்குலங்கள் தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடியாது. எனினும், அவற்றின் பார்வை விசேஷமாக மங்கலான வெளிச்சத்தில் மிகவும் சிறப்பாக இருக்கும். பல ஆந்தைகள் முழு இருட்டிலும்கூட ஒலியைக் கொண்டு வேட்டையாடக் கூடியவை.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி