அதிக பாரம் ஏற்றி வந்தபோது விபத்து சாலையோரம் நின்ற தொழிலாளி டாரஸ் லாரி மோதியதில் படுகாயம்

அருமனை : அருமனை அருகே குளிச்சல் பனவிளை பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளி. இவர் நேற்று காலை வேலைக்கு சென்றுள்ளார். வேலையை முடித்துவிட்டு குஞ்சாலுவிளை பகுதியில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அதிக பாரத்துடன் கனிவளம் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக பால்ராஜ் மீது மோதியது. இதில் அவரின் 2 கால்களும் முறிந்தன.அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அறிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும் அருமனை போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து, டாரஸ் லாரியை கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் விபத்து தொடர்பாக விசாரித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரி சாலையின் வலது பக்க ஓரமாக நின்று கொண்டிருந்த பால்ராஜ் மீது ராங் சைடில் வந்து மோதியுள்ளது. அதிக பாரம் ஏற்றி வந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டது என அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது