Sunday, September 8, 2024
Home » அசிடிட்டியை வெல்ல…

அசிடிட்டியை வெல்ல…

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

ஒரு புதிய தீர்வு!

அசிடிட்டி மற்றும் ஆசிட் ரிஃப்லக்ஷன் இன்று உலகம் முழுதும் உள்ள ஒரு சர்வதேசப் பிரச்சனை. குறிப்பாக இந்தியர்களுக்கு அதிலும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்தப் பாதிப்பு மிகவும் அதிகம். போதுமான உடற்பயிற்சியின்மை, உறக்கமின்மை, ஆரோக்கியமான உணவுகளை உண்ணாதது என அசிடிட்டி பிரச்சனைக்கு நவீன வாழ்க்கை முறை சார்ந்த காராணங்கள் நிறைய உள்ளன. இதற்கான நவீன தீர்வாக வந்திருக்கிறது கோவிஸ்கான் டபுள் ஆக்சன்.

நுகர்வோர் ஆரோக்கியம், சுகாதாரம்

மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ரெக்கிட் (Reckitt), அதன் கேவிஸ்கான் பிராண்டின் கீழ், இன்று தமிழ்நாட்டில் கேவிஸ்கான் டபுள் ஆக்ஷனை அறிமுகப்படுத்தியது, இது ஆசிட் ரிஃப்ளக்ஸ் நோய்க்குத் தீர்வை வழங்குகிறது. வேகமான வாழ்க்கை முறைகள், மாறிவரும் உணவுப் பழக்கங்கள், அதிகரித்து வரும் மன அழுத்தம் ஆகியவை வழக்கமாகிவிட்ட உலகில், அமிலப் பின்னோட்ட நோய் அல்லது ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சல் ஆனது அதிகரித்துவரும் உடல்நலப் பிரச்சினைகளாக உள்ளன. இப்பிரச்னையானது உலகளவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் அதிகமாக உணரப்படுகிறது. ரெக்கிட் இந்தியாவைச் சேர்ந்த கேவிஸ்கான் நிறுவனமானது அமிலப் பின்னோட்ட நோய் அல்லது ரிஃப்ளக்ஸ் ஆல் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான தீர்வாக, தமிழகத்தில் கேவிஸ்கான் டபுள் ஆக்சனை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

அறிகுறிகளுடன் கூடிய அமிலப் பின்னோட்டநோய் என்பது ஒரு பரவலான பிரச்சனை. இது பல்வேறு மக்களை பாதிக்கிறது. ரிஃப்ளக்ஸ் என்பது இரைப்பையில் இருந்து உணவுக்குழாய்க்கு இரைப்பை திரவங்களும் உணவுகளும் மேல்நோக்கித் தள்ளப்படுகின்றன. இரைப்பை திரவங்களில் அடங்கியுள்ள அமிலத்தால் உணவுக் குழாயின் சீதமென் சவ்வு பாதிக்கப்படுவதால் உணவுக்குழாய் அழற்சி ஏற்பட்டு இந்த நோய் தீவிரமடைகிறது. இதனால், வயிறு , மார்பு மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்படும் சூழல் உருவாகும். தவிர, துர்நாற்றம் மற்றும் புளிப்புச் சுவை போன்ற அறிகுறிகளும் ஏற்படும். ஆன்டாக்சிட்கள் ஆனது அசிடிட்டியை கட்டுப்படுத்தும் அதே வேளையில், அமிலப் பின்னோட்ட நோயின் காரணத்தை சரிசெய்ய இயலாது.

அதிகரித்து வரும் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட, மதிப்புமிக்க நிபுணர்களுடன் கேவிஸ்கான் ஒரு கலந்துரையாடலை நடத்தியது. ரிஃப்ளக்ஸ் பிரச்சனையைப் பற்றி பேராசிரியர் டாக்டர் பீட்டர் கஹ்ரிலாஸ் (கில்பர்ட் ஹெச். மார்க்வார்ட், மருத்துவப் பேராசிரியர்), வடமேற்குப் பல்கலைக்கழகம், ஃபீன்பெர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் டாக்டர் பாலி ஹங்கின், மருத்துவ அறிவியல் எமரிட்டஸ் பேராசிரியர், நியூகேஸ்டில் பல்கலைக்கழகம் ஆகியோர் அடங்கிய நிபுணர்கள் குழு விவாதமும் நடைபெற்றது.

நிபுணர் குழு விவாதத்தின் போது குறிப்பிட்டு பேசியதாவது, “ வயிறு/மார்பில் எரியும் உணர்வு, அசௌகரியம் மற்றும் புளிப்புச் சுவை அல்லது உணவு மேல் எழுவது போன்ற அறிகுறிகளை ரிஃப்ளக்ஸின் அறிகுறிகளாகும். இந்த ரிஃப்ளக்ஸை திறம்பட நிர்வகிப்பது மிக முக்கியமாகும். அதற்கு இரண்டு விதங்களை பின்பற்றலாம். அதாவது, அறிகுறிகளுக்கு பங்களிக்கும் அமிலத்தைத் தணிப்பது மற்றும் வயிற்றில் ரிஃப்ளக்ஸை அடக்குவதற்கு உடல் ரீதியாக தடையை ஏற்படுத்த வேண்டும். ரிஃப்ளக்ஸின் முழு அறிகுறிகளைப் புரிந்துகொள்வது மற்றும் தொடர்புடைய மேலாண்மை உத்திகளைப் பயன்படுத்துவது நோயாளியின் பராமரிப்பை கணிசமாக மேம்படுத்தும்.” என்று கூறப்பட்டது.

சோடியம் அல்ஜினேட் அடிப்படையிலான தயாரிப்புகளைப் பயன்படுத்தி இரண்டு விதமான பிரச்சனையை நிர்வகிப்பது குறித்து குழு விவாதித்தது. அதோடு, இரப்பையிலிருந்து உணவு மீண்டும் எழுவதைத் தடுக்கும் ஒரு உடல் தடையை உருவாக்க அவை உதவுகின்றன, அதே நேரத்தில் அமிலத்தை ஆன்டாசிட் வழியாக நடுநிலையாக்குகின்றன.

ரெக்கிட் குழுமத்திலிருந்து வரும் கேவிஸ்கானின் புதிய டபுள் ஆக்ஷன் தீர்வு ஆனது, அமிலப் பின்னோட்ட நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் பயனுள்ள தீர்வாக அமைகிறது. இது ரிஃப்ளக்ஸை நிறுத்த ஒரு ராஃப்ட் நடவடிக்கையைக் கொண்டுள்ளது மற்றும் ஆன்டிசிட் செயலையும் வழங்குகிறது. இந்த தயாரிப்பானது கர்ப்பிணிப் பெண்களுக்கு கூட அவர்களின் அசிடிட்டியை குணப்படுத்துவதற்கு உகந்தது. அந்த அளவுக்கு மிகவும் பாதுகாப்பானது. Gaviscon சர்வதேச அளவில் முன்னணி ஆல்ஜினேட் ஆன்டாசிட் பிராண்டுகளில் ஒன்றாகும், மேலும் நாட்டிலேயே முதன்மையான தயாரிப்புகளில் இதுவும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மருத்துவப் பயிற்சியாளர்களால் நம்பப்படுகிறது.

சிறப்புக்குரிய தயாரிப்பின் அறிமுகம் பற்றி, Gaviscon நிறுவன உலகளாவிய மருத்துவச் சந்தைப்படுத்தல் மேலாளர் எட்வர்ட் தாமஸ் மற்றும் Reckitt India (Strepsils மற்றும் Gaviscon) பிராண்ட் மேலாளர் மனவ் சோஹல் பேசும்போது, “ உலகளவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் உயர்தர கேவிஸ்கான் தயாரிப்புகளின் அடிப்படையில் சந்தையில் நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளோம். கேவிஸ்கான் டபுள் ஆக்ஷன் என்பது இந்தியாவில் நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய தயாரிப்பாகும். அசிடிட்டி பிரச்சனை மற்றும் இந்தியாவில் நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்துவது தொடர்பான அறிவைப் பரப்புவதில் இன்று நடத்தப்படும் வெளியீடானது விலைமதிப்பற்ற ஒன்றாகும்” என்றார்.

அசிடிட்டி மேலாண்மை அறிகுறிகளின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தன்மையைப் பொறுத்தது, இது மருத்துவரால் பரிந்துரைக்கப்படும். கூடுதலாக அடிக்கடி சிறிய உணவை உட்கொள்வது, அதிக காரமான/கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது, உணவுக்குப் பிறகு நிமிர்ந்து இருப்பது, மன அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் புகைபிடித்தல்/ஆல்கஹாலைத் தவிர்ப்பது போன்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் அறிவுறுத்தப்படுகின்றன.

கார்பனேற்றப்பட்ட பானங்கள், தேநீர், காபி மற்றும் சாக்லேட் ஆகியவற்றைக் குறைக்க பரிந்துரைக்கப்படுகிறது, அதேபோல் இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்கவும். அதிக எடை கொண்ட நபர்கள் எடையைக் குறைக்கவும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். தொடர்ச்சியான அறிகுறிகளுக்கு, வலுவூட்டப்பட்ட வாழ்க்கை முறை மாற்றங்களுடன் குறுகிய கால ஆன்டாசிட் பயன்பாடு பரிந்துரைக்கப்படுகிறது.

தொகுப்பு: ஜாய் சங்கீதா

You may also like

Leave a Comment

1 + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi