மேல்பாடி அருகே கனமழையால் சேதமான நெற்பயிர்கள்

*அதிகாரிகள் கணக்கெடுப்பு

பொன்னை : மேல்பாடி அருகே கனமழை காரணமாக சேதமான நெற்பயிர்களை அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு கணக்கெடுப்பு செய்தனர்.வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, மேல்பாடி, வள்ளிமலை, பொன்னை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக மேல்பாடி அருகே விவசாய நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பயிர் சேதம் குறித்து அதிகாரிகள் பார்வையிட்டு அரசின் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.அதன்பேரில், விஏஓ யோகேஷ், வேளாண்மைத்துறை அலுவலர் விமல் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டு பயிர் சேதம் குறித்து கணக்கெடுப்பு செய்தனர்.

Related posts

அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

தமிழக மீனவர்களுக்கு ஒன்றரை ஆண்டு சிறை, அபராதம் விதிப்பு: இலங்கை அரசின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும்… ராமதாஸ் வலியுறுத்தல்

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்