ரூ.500.97 கோடி மதிப்பீட்டில் 552 புதிய தாழ்தள பேருந்து கொள்முதல் செய்ய ஆணை: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யவும் மாற்றுதிறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயன்படுத்தவதற்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 552 புதிய தாழ் தள பேருந்துகள் ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் கொள்முதல் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் உத்தரவுப் படி ரூ.500.97 கோடி மதிப்பீட்டில் 552 புதிய தாழ்தள பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளை மேம்படுத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு (சென்னை மாநகர போக்குவரத்துகழம் – 352, கோயம்புத்தூர்-100, மதுரை- 100) மொத்தமாக 552 புதிய தாழ்தள நகர பேருந்துகளை மக்களின் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் வகையில் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளின் மூலம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் மூலமாக வழங்கப்படும் பொதுப் பேருந்து சேவைகள் நாட்டில் முதன்மையான நிலைக்கு உயர்ந்திடும்.

Related posts

புதிய விண்வெளி கொள்கையை அறிமுகப்படுத்துகிறது தமிழ்நாடு அரசு

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லியில் புதிய குற்றவியல் சட்டத்தின்படி சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு