வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரியை சேர்ந்தவர் குடும்பத்துக்கு ரூ3 லட்சம் நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


சென்னை: கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் ரூ 3 லட்சம் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலையில் பணியாற்றி வந்த நீலகிரி மாவட்டம் பந்தலூர் வட்டம் சேரங்கோடு 1 கிராமம் கொல்லிஅட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த திரு.கல்யாணகுமார் (வயது 52) த/பெ. முருகையா என்பவர் நேற்று (30.07.2024) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த கல்யாணகுமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் கல்யாணகுமார் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

Related posts

நாய்கள் இனப்பெருக்க கொள்கைக்கு ஒப்புதல்: 11 நாய் இனங்களுக்கு தமிழ்நாட்டில் தடை; தமிழக அரசு அரசாணை வெளியீடு

லஞ்சம் கொடுத்து வங்கியில் கடன் வாங்கிய வழக்கில் அதிமுக முன்னாள் எம்பிக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து: ஐகோர்ட் தீர்ப்பு

மதுரையில் 9ம் தேதி அதிமுக உண்ணாவிரதம்