பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவு


சென்னை: பொங்கல்பரிசு தொகுப்பு வழங்கிய ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவு அளித்துள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகையாக குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 காசு ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளது. 2024 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் சிறப்பு பணிக்கு ஊக்கத்தொகையாக ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வழங்க அறிவுறுத்தியுள்ளனர். நியாயவிலைகடை பணியாளர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதை கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த ஜனவரி 8ஆம் தேதி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பை வாங்குவதற்கான டோக்கன்களை வழங்கினர். அதன்படி, ஜனவரி 10ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளின் வாயிலாக ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

இதன் பின்னர், ஜனவரி 13 மற்றும் 14ம் தேதிகளில் டோக்கன் பெறாதவர்களுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூபாய் ஆயிரம் ரொக்கப் பணமாக வழங்கப்பட்டது.ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை வாங்குவதற்காக பொதுமக்கள் ஒரே நேரத்தில் கூட்டமாக வருவதை தவிர்க்கும் வகையில் அவர்களுக்கு டோக்கன் வழங்கி அதன் மூலமாக பொங்கல் தொகுப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டது. டோக்கனில் கடையின் பெயர், டோக்கன் எண், எந்த தேதியில், எத்தனை மணிக்கு வர வேண்டும் போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா விதம் அவர்கள் 3 நாட்களாக பரிசுத்தொகுப்பு வழங்கிய குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை பொறுத்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இந்த பரிசு தொகை அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படம் என்று தெரிவித்துள்ளனர். வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதை கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு