கேரளாவுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்

திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே நேற்று திருவனந்தபுரம் உள்பட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கையின் தென்பகுதிக்கு அருகே ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

கேரளாவில் நேற்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் உள்பட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. எர்ணாகுளம் மாவட்டத்திற்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 3 நாட்களுக்கு லட்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Related posts

தலைவர்கள் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை

முக்கிய நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சித்தூர் மாநகரத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல தடையின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு