குரூப்4 தேர்வு காலிப்பணியிடங்களை அதிகரிக்க ஓபிஎஸ், டிடிவி கோரிக்கை

சென்னை: குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் கோரியுள்ளனர். முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம்: குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிக்கையில் வெறும் 6,244 இடங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் இருக்கின்ற நிலையில், இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் சமூகநீதி, அரசின் நலத் திட்டங்கள் மக்களை சென்றடைவது, காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த ஆண்டு குறைந்தபட்சம் ஒரு லட்சம் குரூப்-4 காலிப் பணியிடங்களையாவது நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்: ஜூன் மாதம் நடைபெற உள்ள குரூப் 4 தேர்வை எந்த புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடத்த டிஎன்பிஎஸ்சி கவனம் செலுத்த வேண்டும். தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை நினைவாக்கும் வகையில் குரூப் 4 தேர்வுக்காலிப்பணியிடங்களை அதிகரித்து புதிய அறிவிப்பாணை வெளியிட வேண்டும்.

Related posts

செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் குறைக்கப்பட்டுள்ளது: எஸ்.பி. சாய்பிரனீத் பேட்டி

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் கணினி அறிவியல் சங்கம் தொடக்கம்

குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காஞ்சி கலெக்டர்