ஓபிஎஸ் வலியுறுத்தல் சொத்து வரி உயர்த்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி தரக்கூடாது

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: ஏப்ரல் மாதம் முதல் 6% வரை சொத்து வரியை உயர்த்திக் கொள்ள அனுமதி அளிக்குமாறு உள்ளாட்சி அமைப்புகள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன் சொத்து வரியை உயர்த்துவதற்காக நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகள் எடுக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஏழை எளிய மக்கள்தான் பாதிக்கப்படுவர்.

வீட்டு உரிமையாளர்கள் மீது வரி விதிக்கப்படுகிறது என்றாலும், பாதிக்கப்படுபவர்கள் ஏழையெளிய மக்கள்தான் என்பதை நன்கு அறிந்தும், வீட்டு வரியினை அரசு உயர்த்துவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே சொத்து வரியை 6 சதவீதம் உயர்த்திக் கொள்ள உள்ளாட்சி அமைப்புகள் கோரியுள்ள அனுமதியை அரசு நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

சொல்லிட்டாங்க…

மலராத கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!