ராமநாதபுரம் தேர்தல் முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் வழக்கு

சென்னை: ராமநாதபுரம் மக்களவை தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி 5,09,664 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். நவாஸ் கனி வெற்றியை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; பிரிந்து கிடக்கும் அதிமுக இணைய வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதிமுகவை இணைத்துக் கொள்ளுங்கள் என்று நாங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கவில்லை; சசிகலா பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் என்று கூறினார்.

Related posts

ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினர் சர்ச்சை கருத்து: நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகரில் தண்டவாளத்தில் அமர்ந்து எஸ்.ஐ தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்