ஓபிஎஸ் இல்லாமல் வெற்றி பெற முடியாது அதிமுக மாஜிக்கள் ஊழல் வழக்கை ஆளுநர் கிடப்பில் போடுவது தவறு: டிடிவி.தினகரன்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டி: இரட்டை இலை சின்னம் இருந்தும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தற்போது எவ்வளவு பலவீனம் அடைந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இதனை மறைப்பதற்காக அமமுக உள்ளிட்ட பல கட்சிகளில் இருந்து பலரை கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அதிமுகவில் இணைத்து வருகின்றனர். அதிமுக தற்போது வட்டார கட்சியாக பலவீனம் அடைந்து வருகிறது. ஓ.பி.எஸ் இல்லாமல் அதிமுக வெற்றி பெற முடியாது. டிசம்பர் அல்லது ஜனவரியில் தான் அமமுக யாருடன் கூட்டணி என்பது தெரியவரும்.

முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். இதனை கால தாமதப்படுத்தும் விதமாக ஆளுநர் அதற்கான ஒப்புதலை கிடப்பில் போட்டிருந்தது தவறு. இதுபோல ஆளுநர் தாமதப்படுத்தினால் ஊழல் வழக்குகள் பெருகும் நிலை ஏற்படும். பலரை பாதுகாக்கும் விதமாக ஆளுநர் செயல்படுவது தவறு. எடப்பாடி பழனிச்சாமி, முதலில் வன்னியர்களை ஏமாற்றினார். அதன் பின்னர் ஒவ்வொருவராக ஏமாற்றி வருகிறார். அதேபோல தான் தற்போது சிறுபான்மையினர் மீது அக்கறை இருப்பது போல் நடித்து அவர்களை ஏமாற்றி வருகிறார். சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு இனி ஒருபோதும் வராது. அறநிலையத்துறை இருக்கக் கூடாது என்று கூறுவது சரியான முடிவு அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு

திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய காதலன்: போக்சோ சட்டத்தில் கைது

வங்கியில் அடகு வைத்துள்ள நகையை மீட்டு தருவதாக கூறி நகை கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் அபேஸ் செய்த வாலிபர்: ஆன்லைன் ரம்மி விளையாட கைவரிசை