எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பாட்னா வந்தார் ராகுல் காந்தி; பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வரவேற்றார்..!!

பாட்னா: எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ராகுல் காந்தி பாட்னா வந்தார். பாட்னா விமான நிலையத்தில் ராகுல் காந்தியை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் வரவேற்றார். பீகார் மாநிலம் பாட்னாவில் நிதிஷ்குமார் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து பாட்னாவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூட்டம் நடத்துகிறார்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாட்னாவில் முகாமிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் 20 கட்சிகள் பங்கேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாட்னா வந்தடைந்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் ஆகியோரும் வருகை தந்துள்ளனர். அவர்களை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

 

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்