எதிர்க்கட்சிகள் திடீர் விஸ்வரூபம் எம்பிக்களுடன் தனித்தனியாக மோடி ஆலோசனை: அதிகாரிகள், அமைச்சர்களும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்

புதுடெல்லி: எதிர்க்கட்சிகள் திடீரென்று விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் தினமும் 10 எம்பிக்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். மக்களவை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. 23 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் மாநிலங்களில் ஆட்சியில் இருப்பவை. செல்வாக்காகவும் இருக்கிறது. இதனால் ஆளும் கட்சியின் வியூகத்தை உடைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.

2 கூட்டங்களை வெற்றி கரமாக முடித்து 3வது கூட்டம் மும்பையில் கூடுவதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், நாடு முழுவதும் ஒன்றிய உளவுத்துறை ஒரு சர்வே எடுத்துள்ளதாகவும், அதில் 357 தொகுதிகளில் எதிர்க்கட்சி வெற்றி பெறும் என்றும் ஆளும் பாஜகவுக்கு 155 தொகுதிகளே கிடைக்கும் என்றும், எந்த அணியிலும் சாராதவர்கள் 31 இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஒன்றிய உளவுத்துறையின் கணக்குப்படி பார்த்தால் கடந்த தேர்தலில் 303 இடங்களில் வென்ற பாஜக இந்த முறை கூட்டணிக்கும் சேர்த்து 155 இடங்களே கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால்தான், 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவும் திட்டம் வகுத்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு போட்டியாக 38 கட்சிகளுடன் கடந்த 18-ந்தேதி டெல்லியில் கூட்டம் நடத்தியது. தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டு வருகிறார்கள். மக்களவை தேர்தல் நெருங்குவதால், தேர்தல் குறித்து திட்டம் வகுக்க, இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரதமர் மோடி எம்.பி.க்களை 10 குழுக்களாக பிரித்து அவர்களுடன் தினந்தோறும் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது

போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதையில் உலா வரும் காட்டு யானை : வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை