இப்போது எதிர்க்கட்சிகளை குறிவைத்து ரெய்டு மக்களவை தேர்தலுக்கு பின் சி.பி.ஐ, ஈடி பாஜ.வை விரட்டும்: முதல்வர் மம்தா பேட்டி

கொல்கத்தா: வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, அப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜ.வை சிபிஐ, ஈ.டி விரட்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்ளரங்கில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் அம்மாநில முதல்வரும் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கேற்று பேசியதாவது: மத்தியில் தற்போது ஆளும் அரசின் ஆட்சி இன்னும் 3 மாதங்களில் முடிந்து விடும்.

அதன் பிறகு, தற்போது எதிர்க்கட்சிகளை குறிவைத்து நடவடிக்கை எடுக்கும் ஒன்றிய அரசின் அமைப்புகளான சிபிஐ, ஈ.டி ஆகியவை வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பின், அப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜ.வை விரட்டும். பாஜ சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டுக்கு எதிரானது. ஓபிசி இடஒதுக்கீடு மூலம் இந்தியா கூட்டணி இதனை நிறைவேற்றும். மெட்ரோ ரயில் நிலையம் முதல் கிரிக்கெட் அணி வரை அனைத்தையும் காவி மயமாக்கும் நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி கொல்கத்தா அல்லது மும்பையில் நடந்திருந்தால் இந்தியா நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கும். பாவம் செய்தவர்கள் பார்க்க சென்றதால் இந்தியா தோல்வி அடைந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

* மஹுவாவுக்கு ஆதரவு
மஹுவா மொய்த்ரா குறித்து பேசிய மம்தா, “தற்போது நாடாளுமன்றத்தில் இருந்து அவரை வெளியேற்ற திட்டமிடப்படுகிறது. இதன் விளைவாக அவர் இன்னும் பிரபலமடைவார்” என்று கேள்வி எழுப்பினார்.

Related posts

நீட் முறைகேடு – நாடாளுமன்றம் முன் இன்று போராட்டம்

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!