எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக பெங்களூரு சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்; டி.கே.சிவக்குமார் உற்சாக வரவேற்பு..!!

பெங்களூரு: எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூரு சென்றடைந்தார். பெங்களூருவில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெங்களூரு விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வரவேற்றார். பீகாரை அடுத்து இன்றும், நாளையும் பெங்களூருவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கட்சி தலைவர்கள் பெங்களூரு வருகை தருகின்றனர்.

கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்நிலையில், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் முக.ஸ்டாலின் பெங்களூரு சென்றடைந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலினுடன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உடன் சென்றுள்ளார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசிக்க உள்ளனர். கடந்த ஜூன் 23ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி இருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.

Related posts

பிளஸ் 2 மாணவர்கள் திருமண வீடியோ விவகாரம்: 4 மாணவர்கள் சஸ்பெண்ட்

அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதித்த 3 ஆண்டு சிறை ரத்து: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே குப்பைத் தொட்டியில் பதுக்கி மது விற்ற 2 பேர் கைது!!