கனிமொழியை எதிர்த்து நின்ற அனைவருக்கும் டெபாசிட் காலி

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முடிவடைந்த நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி மீண்டும் போட்டியிட்டார். இதில் 3,92,738 வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி அபார வெற்றி பெற்றார்.

கனிமொழியை எதிர்த்து, அதிமுகவின் சிவசாமி வேலுமணி உட்பட 27 பேர் போட்டியிட்டனர். இவர்கள் அனைவருமே டெபாசிட் இழந்தனர். இதேபோல், கிருஷ்ணகிரியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 1,92,486 வாக்கு வென்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட 24 வேட்பாளர் டெபாசிட் இழந்தனர்.

Related posts

எதிர்கட்சிகளின் எதிர்ப்பு, சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கலுக்கு மத்தியில் 3 புதிய கிரிமினல் சட்டங்கள் நாளை மறுநாள் அமல் : பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க புதிய தொழில்நுட்ப வசதிகள்

காஞ்சிபுரம் அருகே ஓடும் காரில் தீ

விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது தானியங்கி மூலம் வழக்குப்பதிவு; காஞ்சிபுரத்தில் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது