வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ளுங்கள்!

நம்மில் பலர் எந்த முயற்சியும் இல்லாமல், வந்த வாய்ப்புகளையும் முறையாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு பின்னர் தன்னை ராசி இல்லாதவர்களாகவும், விதியை நொந்துகொண்டும் இருப்பார்கள். திடமான தன்னம்பிக்கையுடனான முயற்சியும், தோல்வியைக் கண்டும் துவளாத தன்னம்பிக்கையும்தான் வெற்றிவாகை சூடவைக்கின்றன.பதின்மூன்று வயதில் படிப்பு போச்சு… வீட்டில் ஏழ்மை.. தொடர்ந்து பல நாட்களாகப் பசி… வேலை தேடித்தேடி அலுத்துப்போச்சு… ஒருநாள் பசியால் மயக்கமடைந்து ஒரு நாடகக் கொட்டகை வாசலில் சொருகும் கண்களுடன் அமர்ந்திருந்தான் அந்தச் சிறுவன். ஒரு பணக்காரர் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார். பையனிடம், ‘‘டேய் இங்கே கட்டிவிட்டு செல்லும் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது காசு தருகிறேன்,” என்றார்.ஆஹா… இப்படி ஒரு வேலையா?’ பையன் ஆர்வமாகத் தலையாட்டினான். தெம்புடன் எழுந்தான். நாடகம் முடிந்து பணக்காரர் வெளியே வந்தார்.

வெளியே நிற்பது தன் குதிரைதானா என்ற சந்தேகம் வந்து விட்டது. குதிரையைச் சுத்தப்படுத்தி, சேணத்தைப் பளபளப்பாக துடைத்து வைத்திருந்தான் பையன். சற்று அதிகமாகப் பணத்தை அவனிடம் நீட்டினார் பணக்காரர். சில்லரை கிடைக்குமென நினைத்தவனின் கையில் பணம்… மகிழ்ந்தான். மறுநாள் நாடகம் பார்க்க வந்த மற்றவர்களும் குதிரையை அவனிடம் ஒப்படைக்க, அவற்றையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான். வருமானம் பெருகவே, குதிரைலாயமே அமைத்து, உதவிக்கு வேலைக்கு ஆள் அமர்த்தி முதலாளியாகி விட்டான். நாடகங்களையும் கவனித்தான். மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான். அந்தச் சிறுவன்தான், உலகப்புகழ் பெற்ற இலக்கிய மாமேதை ஷேக்ஸ்பியர்.மனிதர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் நல்ல நேரம் வரும். வருகிற சந்தர்ப்பத்தை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், குதிரைக்காரனும் குபேரனாகி விடலாம். கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துகின்றவர்கள் வெற்றிகரமாக வலம் வருகின்றனர்.

– ஏ. பி. முருகானந்தம்

 

 

 

Related posts

ஏரியில் குளிக்க சென்ற 4 சிறுவர்கள் மூழ்கி பலி

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழக பக்தர்கள் 17 பேர் சிதம்பரம் வந்தடைந்தனர்: 13 பேர் இன்று சென்னை வருகை

குஜராத்தில் ஒரு டோல்கேட் கூட அமைக்காத ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தில் 67 டோல்கேட் அமைத்தது ஏன்? அதிமுக கேள்வி