சர்ச்சைக்குரிய கருத்து நீக்கப்படும் என தயாரிப்பாளர் வாக்குறுதி :தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர் நீதிமன்றம் மறுப்பு

திருவனந்தபுரம் : ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படத்தின் டீசர், கடந்த மார்ச் 22ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த திரைப்படம் எந்த ஆராய்ச்சியும் செய்யாமல், எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லாமல், உண்மை சம்பவம் எனக் கூறி நாட்டில் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் படம் எடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

டீசர் காட்சியில் முதலில் தோன்றும் பெண், தனது பெயர் ஷாலினி உன்னி கிருஷ்ணன் எனவும், தற்போது பாத்திமா எனவும், தான் ஒரு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதி எனவும், ஆப்கன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னைப்போல் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, சிரியா மற்றும் ஏமனில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. மறைக்கப்பட்ட உண்மைகளை அம்பலப்படுத்தும் படம் என்று பிரகடனமும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் படத்திற்கு தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், வழக்கை விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் கேரள உயர்நீதிமன்றத்தை நாட மனுதாரருக்கு அறிவுறுத்தியது. அதன்படி கேரள உயர்நீதிமன்றம் இன்று இதுதொடர்பான வழக்கை விசாரித்த நிலையில் படத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் நீதிபதிகள், “மனுதாரர்கள் கூட இன்னும் படத்தை பார்க்கவில்லை எனும்போது எப்படி தடை செய்ய உத்தரவிட முடியும்? மேலும் தணிக்கை குழு, படத்தை பார்த்துவிட்டு சான்றிதழ் அளித்துள்ளது.

இந்தப் படம் கற்பனையே தவிர வரலாறு அல்ல என்றும், கேரளத்தைப் போன்ற மதச்சார்பற்ற சமூகம் இந்த படத்தை ஏற்றுக் கொள்ளும். படத்தை திரையிடுவதால் கேரளத்தில் நிலவும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முடியாதுமேலும் இதில் இஸ்லாமுக்கு எதிராக எதுவும் இல்லை, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு எதிராகத்தான் இருக்கிறது’ என்று கூறியுள்ளனர். ட்ரைலரில் இடம்பெற்றுள்ள ‘கேரளத்தில் உள்ள 32,000 பெண்கள் ஐ.எஸ். அமைப்பில் இணைந்துள்ளனர்’ என்ற கருத்து நீக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சி அளிக்கிறது: தவெக தலைவர் விஜய்

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே இன்று அதிகாலை விபத்து: காரில் பயணித்த பெண் பலி