தென்மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை: தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்து, சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் மாலை 6.45 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு மாலை 3 மணிக்கு ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜூன் 2,16, 30 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது