அமெட் அறிவுப் பூங்காவில் ஏ.பி. மொல்லர் – மெர்ஸ்க் தனிச்சிறப்பு மையம் திறப்பு

சென்னை: கல்பாக்கம் அருகே அமெட் அறிவுப் பூங்காவில் ஏ.பி. மொல்லர் – மெர்ஸ்க் தனிச்சிறப்பு மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. கல்பாக்கம் அருகே உள்ள தென்பட்டினம் (இசிஆர்) கிராமத்தில் அமெட் அறிவுப் பூங்காவில் ஏ.பி. மொல்லர் – மெர்ஸ்க் தனிச் சிறப்பு மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. அமெட் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் ஜெ.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இணைவேந்தர் ராஜேஷ் ராமச்சந்திரன் வரவேற்றார். 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அமெட் அறிவுப் புதிய வளாகத்தை அமெட் நிர்வாக அறங்காவலர் சுசீலா ராமச்சந்திரன் திறந்து வைத்து பேசினார்.

இந்திய கடல்சார் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உயர்தர கடல்சார் கல்வியை வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்ட மெர்ஸ்க் தனிச்சிறப்பு மையத்தை ஏ.பி. மொல்லர் – மெர்ஸ்க்கின் கடல்சார் மக்கள் மற்றும் கலாச்சாரத்தின் துணைத் தலைவர் நீல்ஸ் எச்.புரூஸ் திறந்து வைத்தார். விடுதி வளாகத்தை செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இந்துபாலாவும், உணவக வளாகத்தை கடல்சார் மக்கள் தலைமை, ஆசியா மெர்ஸ்க் பிளீட் மேனேஜ்மென்ட் மற்றும் டெக்னாலஜியின் இயக்குனர் கரண் கோச்சார் (மும்பை) ஆகியோர் திறந்து வைத்தனர்.

அமெட் பல்கலைக்கழக நிறுவனர் ஜெ.ராமச்சந்திரன் பேசுகையில், ‘‘கோபன்ஹேகனில் நீல்ஸ் புரூஸுடனான சந்திப்பின்போது தான் தனிச்சிறப்பு மையத்தை நிறுவவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்த புதுமையான முயற்சி இந்திய இளைஞர்களின் வாழ்வில் மலருவதில் குறிப்பிடத்தக்க மறுமலர்ச்சியாக இருக்கும்’’ என்றார். பல்கலைக்கழக இணைவேந்தர் ராஜேஷ் பேசுகையில், ‘‘புதிய வளாகம் அமைப்பது ஒரு துணிச்சலான நடவடிக்கை. மெர்ஸ்க் தனிச்சிறப்பு மையம், இந்த முயற்சி மாற்றத்தை ஏற்படுத்தும்’’ என்றார். விழாவில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் இந்துபாலா, நீல்ஸ் எச்.புரூஸ், கேப்டன் கரண் கோச்சார், காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். தனிச்சிறப்பு மைய கலாச்சார மற்றும் திறன் மேலாளர் அரவிந்த் சங்கர் நன்றி கூறினார்.

Related posts

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: வரும் 5ம் தேதி போராட்டம் நடத்த முடிவு

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி