இந்தியாவின் வர்த்தகத்தை ஊக்குவிக்க சென்னையில் புதிய பிம்ஸ்டெக் வர்த்தக அலுவலகம் திறப்பு

சென்னை: இந்தியாவின் வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் புதிய பிம்ஸ்டெக் வர்த்தக அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுக்கப்பட்ட பிம்ஸ்டெக் அமைப்பு 1997ம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து, பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய ஏழு உறுப்பு நாடுகள் உள்ளது. இந்தியாவின் வார்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் பிம்ஸ்டெக் வர்த்தக அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. மேலும் பிம்ஸ்டெக் நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை புதிய உயரத்திற்கு உயர்த்துவதே நோக்கம் என பிம்ஸ்டெக் தலைவர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தினேஷ்குமார் கூறியதாவது: இந்திய பிம்ஸ்டெக் வர்த்தக கவுன்சிலின் தலைவர் என்ற முறையில், இந்தியாவிற்கும் அனைத்து பிம்ஸ்டெக் நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை புதிய உயரத்திற்கு உயர்த்துவதே எனது நோக்கம். நவம்பர் 2023ல் நடைபெறவிருக்கும் இந்தியா பிம்ஸ்டெக் மாநாடு இந்தியத் தரப்பிலிருந்து குறிப்பிடத்தக்க ஆர்வத்தை உருவாக்கும். இந்நிகழ்வின் போது, ​​அறிவுப் பரிமாற்றம், மனித திறன் மேம்பாடு மற்றும் விவசாய விளைபொருட்களின் ஏற்றுமதி ஆகியவற்றில் கவனம் செலுத்தி இந்தியாவையும் அதன் தலைமைத் திட்டங்களையும் தீவிரமாக ஊக்குவிப்போம் என்றார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்