சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ சிஇஓ ஆல்ட்மேன் கூகுள் மீட் காலில் டிஸ்மிஸ்: இவருக்கே இந்த நிலையா?


வாஷிங்டன்: சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ ஆல்ட்மேன், ஒரு குறுகிய கூகுள் மீட் அழைப்பு மூலம் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பது தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மேன், டிஸ்மிஸ் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் துணை நிறுவனரும், நிறுவன வாரிய உறுப்பினருமான இலியா, கூகுள் மீட் அழைப்பில் வருமாறு அழைத்து, சாம் ஆல்ட்மேன் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.

அதே போல இந்நிறுவனத்தின் மற்றொரு துணை நிறுவனரான கிரேக் புரோக்மேனும் இதே போல டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். இயக்குநர்கள் குழுவுடன் ஆல்ட்மேன் சரியான தொடர்பில் இல்லாததும், சரியாக, வெளிப்படையாக தகவல்களை தெரிவிக்காததும் அவரது பணிநீக்கத்திற்கு காரணம் என ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாம் ஆல்ட்மேன் பணிநீக்கத்தை தொடர்ந்து நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்த மீரா முராட்டி தற்காலிக சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல்

பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை