ஊட்டி சிறப்பு மலை ரயில் 3 நாட்கள் இயக்கம்

ஊட்டி: தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ சுதந்திர தினம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விடுமுறைக்கு ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் மகிழ வசதியாக வார இறுதி நாட்களில் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி, குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் நாளையும் (16ம் தேதி), நாளை மறுநாளும் (17ம் தேதி) மற்றும் 25ம் தேதி ஆகிய 3 நாட்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் குன்னூரில் காலை 8.20க்கு புறப்பட்டு 9.40க்கு ஊட்டி வந்தடையும். இதேபோல் ஊட்டியில் இருந்து மாலை 4.45க்கு புறப்பட்டு 5.55 மணிக்கு குன்னூர் சென்றடையும். முதல் வகுப்பில் 80 இருக்கைகளும், 2ம் வகுப்பில் 130 இருக்கைகளுடன் இயக்கப்படும். மேலும் ஊட்டி-கேத்தி-ஊட்டி இடையே 3 ரவுண்ட் ஜாய் ரைட் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்