ஊட்டி மலை ரயிலில் பயணித்த ஜெர்மன் விமானப்படை அதிகாரிகள்

மேட்டுப்பாளையம்: கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மன் ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து பயிற்சி மேற்கொண்டனர். இதில் கலந்து கொள்வதற்காக ஜெர்மன் நாட்டு விமானப்படை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இங்கோ ஹெர்கார்ட்ஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட ராணுவ அதிகாரிகள் கொண்ட குழுவினர் வந்திருந்தனர். அவர்கள் நேற்று காலை 6 மணிக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வந்தனர். பின்னர் மலை ரயிலில் குன்னூர் வரை இயற்கை எழில் மிகுந்த செங்குத்தான மலைப்பாதையில் பயணித்து ரசித்தனர். இந்நிலையில், நிலச்சரிவால் சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் இன்று முதல் ஆக.15ம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related posts

வக்பு சட்டத்திருத்த மசோதா குறித்து கருத்தரங்கு; காதர் மொகிதீன் தலைமையில் நடந்தது

மயிலாப்பூர் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 140 சவரன் திருட்டு வழக்கில் சகோதரர் மருமகள் கைது: 70 சவரன் மீட்பு

குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் நுரையீரல், இதய ஆரோக்கியம் குறித்து வாக்கத்தான் விழிப்புணர்வு பேரணி: நாளை இலவச மருத்துவ முகாம்