ரயில் பாதையில் ராட்சத பாறை; ஊட்டி மலை ரயில் சேவை ரத்து: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் கல்லாறு அருகே மலை ரயில் பாதையில் ராட்சத பாறை விழுந்ததால், ஊட்டி மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ட்டுப்பாளையம்- ஊட்டி இடையே யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பசுமையான பள்ளத்தாக்குகள், இதமான சூழல், குளுகுளு நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை ரசிப்பதற்காகவே தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் இந்த மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ந்த நிலையில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

இதன்காரணமாக கல்லாறு- ஹில்குரோவ் ரயில் நிலையங்களுக்கு இடையில் ராட்சத பாறை உருண்டு விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்துள்ளது. மேலும், இந்த மலை ரயில் பாதையில் ஆங்காங்கே மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணியளவில் 184 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்த மலை ரயில் நிறுத்தப்பட்டது. மழை ரயில் சேவை இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் பயண கட்டணம் முழுவதும் ரயில்வே நிர்வாகத்தால் உடனடியாக வழங்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் ஊட்டிக்கு அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்களில் புறப்பட்டு சென்றனர்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு