ஊட்டி- கூடலூர் சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டிய யூடியூபருக்கு ரூ.1000 அபராதம்

ஊட்டி: ஊட்டி – கூடலூர் சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டிய கோவையை சேர்ந்த யூடியூபர் வாசனுக்கு புதுமந்து போலீசார் 1000 ரூபாய் அபராதம் விதித்தனர்.ஊட்டி புதுமந்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று மாலை ஊட்டி-கூடலூர் சாலையில் எச்பிஎப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் ஒருவர் அதிவேகமாக வருவதாக வாக்கி டாக்கி மூலம் எஸ்பி பிரபாகர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து உஷாரான உதவி ஆய்வாளர் செந்தில்குமார் அவ்வழியாக அதிவேகமாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை நடத்தினார். அப்போது பைக்கில் வந்தது கோவையை சேர்ந்த பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் என்பது தெரிய வந்தது.

விலை உயர்ந்த பைக்கை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்ததாக மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் அவருக்கு ரூ.1000 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். டிடிஎப் வாசனுக்கு காவல்துறையினர் அபராதம் விதிப்பதை அந்த வழியாக சென்றவர்கள் வாகனங்களை நிறுத்தி வேடிக்கை பார்த்ததால் அப்பகுதியில் கூட்டம் கூடியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

கோவையில் யானைகள் முகாம்: நவமலைக்கு செல்ல தடை

நாட்றம்பள்ளி அருகே 10 ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர்கள் 57 பேர் மீட்பு