உதகை அருகே தலைகுந்தா ஃபைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா மையத்தில் புலி புகுந்ததால் பரபரப்பு

ஊட்டி: உதகை அருகே தலைகுந்தா ஃபைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா மையத்தில் புலி புகுந்ததால் பரபரப்பு நிலவியது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ஃபைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தக்கூடாது என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலை மாவட்டமான நீலகிரியில் 67% வனப்பகுதிகள் அமைந்துள்ளது. இதனால் அப்பகுயில் ஆண்டுதோறும் சிறுத்தை, புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவற்றின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காரணமாக இரவு நேரங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது போன்ற நிகழ்வுகள் வழக்கமாகி வருகிறது.

இந்நிலையில் இன்று பட்டப்பகலில் உதகை அருகே உள்ள ஃபைன்பாராட்ஸ் சுற்றுலா மையத்தின் அருகே ஒரு புலி உலா வந்தது. பகல் நேரங்களில் புலிகள் சுற்றுலா பகுதிகளுக்கு வருவது அரிது என்ற நிலையில் இன்று ஃபைன்பாராட்ஸ் சுற்றுலா பகுதியில் உலா வந்தது. இந்த புலியை கண்ட உடனடியாக காவல்துறையினருக்கும், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் ஃபைன்பாராட்ஸ் பகுதிக்கு சென்றனர்.

புலியின் நடமாட்டம் இருந்ததால் ஃபைன்பாராட்ஸ் சுற்றுலா தலம் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் அப்பகுதியில் யாரும் செல்ல கூடாது எனவும் வாகனங்களை நிறுத்த கூடாது எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

வடமதுரை மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதர் மண்டிக்கிடக்கும் தொகுப்பு வீடுகள்: சீரமைக்க கோரிக்கை

ஒன்றிய அரசைக் கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

சோழவரம் அருகே குளத்தில் மூதாட்டி சடலம் மீட்பு