ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புல் மைதானம் சீரமைப்பு பணி தீவிரம்

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புல் மைதானம் சீரமைப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்கள் உள்ளன. வரும் ஏப்ரல், மே மாதங்களில் கடைபிடிக்கப்பட உள்ள கோடை சீசன் மற்றும் கோடை விழாவிற்காக ஜனவரி மாதம் முதல் வாரத்திலேயே பூங்காக்கள் தயார் செய்யும் பணிகள் துவங்கி விட்டன. மலர் நடவு பணிகள், குளங்கள் உள்ளிட்டவை தூர்வாரி சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

கோடை சீசனின்போது பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பார்கள். இந்நிலையில் நடப்பு ஆண்டு கோடை சீசனுக்காக பூங்காக்கள் துரித கதியில் தயாராகி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் சீரமைப்பு பணி தொடர்ந்து நடந்து வருகின்றன. தற்போது அலங்கார மேடைகள் மற்றும் தொட்டிகள் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள புல் மைதானம் சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டு உள்ளது. புற்கள் நன்கு வளரும் வகையில் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இதனால் இப்பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி