ஊட்டி தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டுள்ள அலங்கார மாதிரிகளை அகற்ற வலியுறுத்தல்

ஊட்டி: தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்களில் வைக்கப்பட்டுள்ள அலங்கார மாதிரிகளை அகற்ற வேண்டும் என சுற்றுலா அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மே மாதம் மலர் கண்காட்சி நடந்தது. இதற்காக பூங்கா புல் மைதானத்தில் பல்வேறு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதில், பிரம்மாண்ட டிஸ்னி வோல்ட், ஊட்டி மலை ரயில் மாதிரி அமைக்கப்பட்டது. பல லட்சம் மலர்களை கொண்டு இந்த இரு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்த மலர் அலங்காரம் ஜூன் மாதம் வரை வைக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து மலர் அலங்காரங்கள் அகற்றப்பட்டது.

இந்த நிலையில் மலர் கண்காட்சி முடிந்து 4 மாதங்கள் ஆன நிலையில், மலர அலங்காரம் மேற்கொள்ள அமைக்கப்பட்ட பிரமாண்ட இரும்புகளால் ஆன மாதிரிகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இது அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் இடையூறாக உள்ளது. எனவே, இந்த இரும்பு மாதிரிகளை அகற்ற பூங்கா நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, பெரணி இல்லம் அருகே அமைக்கப்பட்டுள்ள மலை ரயில் மாதிரியை அகற்ற வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related posts

செங்குன்றத்தில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை..!!

கூல் லிப் போதைப்பொருள் வழக்கில், மூன்று நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை ஒன்றிய அரசு விரைவில் வெளியிடும்: உள்துறை அமைச்சர் அமித்ஷா தகவல்