ஊட்டியில் பெய்த கன மழையால் சாலையில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது

*மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி : ஊட்டியில் நேற்று முன்தினம் பெய்த திடீர் மழை காரணமாக குந்த சப்பை செல்லும் சாலையில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. அதேபோல் மார்லி மந்து செல்லும் சாலையிலும் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழை சில நாட்கள் பெய்தது. இந்த மழையின்போது பல்வேறு பகுதிகளிலும் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல் ஒரு சில இடங்களில் சாலை ஓரங்களில் லேசான மண்சரிவுகள் ஏற்பட்டன. ஆனால் அண்டை மாநிலமான கேரளா மாநிலம் வயநாட்டில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டு பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர்.

அதன்பின்னர் தொடர்ந்து 2 முறை நீலகிரி மாவட்டத்தில் கன மழைக்கான எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்திருந்தது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகலுக்கு மேல் துவங்கிய மழை சில மணி நேரம் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கொட்டித்தீர்த்தது. இந்த மழையின் காரணமாக ஊட்டியில் இருந்து குந்த சப்பை செல்லும் சாலையில் இருந்த தடுப்புச்சுவர் இடித்து விழுந்தது. இதனால் இவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனடியாக நெடுஞ்சாலைத்துறையினர் சாலை சிரமைப்பு பணிகளை மேற்கொண்டு போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மார்லிமந்து செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையும் உடனடியாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து துவங்கியது. கோடப்பமந்து கால்வாய் அடைப்பு ஏற்பட்டு ஊட்டி மத்திய பஸ் நிலையம் டெப்போவில் மழைநீர் தேங்கியதால் ஊழியர்கள் அவதிக்குள்ளாகினர். அரசு பஸ்களை பழுது பார்க்கும் பணிகள் பாதிக்கப்பட்டன.

Related posts

பலாத்காரம், மிரட்டல் புகார் மூலம் பல பொய்யான எப்ஐஆர்; 10 பேரை திருமணம் செய்த ‘தில்லாலங்கடி’ பெண்ணுக்கு குட்டு: போலீசுக்கு கர்நாடகா ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்செக்ஸ் 83,000 புள்ளிகளைக் கடந்து புதிய உச்சம்..!!

ஆயுள் தண்டனை கைதியை சித்திரவதை செய்த புகாரில் வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்