ஊட்டி – எப்பநாடு சாலையோரங்களில் பூத்து குலுங்கும் எவர்லாஸ்ட் மலர்கள்

ஊட்டி : ஊட்டி – எப்பநாடு சாலையோரங்களில் பூத்துள்ள எவர்லாஸ்ட் மலர்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் இங்குள்ள சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி, இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை காண செல்வது வழக்கம். நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் தாவரவியல் பூங்கா,ரோஜா பூங்கா,குன்னூர் சீம்ஸ் பூங்கா போன்ற பூங்காக்களில் உள்ள பல்வேறு வகையான மலர்கள் வசீகரம் செய்வது போல், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பூக்கும் காட்டு மலர்களும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

குறிப்பாக, ஊட்டியில் பூக்கும் காட்டு சூரியகாந்தி,டேலியா,எவர்லாஸ்ட்,சீகை மர பூக்கள்,கோத்தகிரி மிலார் செடிகளில் பூக்கும் மஞ்சள் நிற மலர்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.இந்த மலர்கள் ஒரே சமயத்தில் பூக்காது.வேறுபட்ட காலத்தில்,காலநிலைக்கேற்ப பூக்கும்.தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மஞ்சள் நிற எவர்லாஸ்ட் மலர்கள் பூத்துள்ளன.

குறிப்பாக,ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலை, ஊட்டி – எப்பநாடு சாலை, காத்தாடிமட்டம், ஆறாவது மைல் பகுதிகளில் இந்த மலர்கள் அதிகளவு பூத்துள்ளது.இவ்வழித்தடத்தில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இந்த மலர்களை கண்டு ரசித்து செல்வதுடன், அதன் நடுவே நின்று புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.

Related posts

மீண்டும் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்!

சென்செக்ஸ் 80000, நிப்டி 24300 புள்ளி கடந்து சாதனை..!!

செஃப் ஏரியா!