ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் படிமட்ட விவசாய பணிகள் தீவிரம்

ஊட்டி : ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் படிமட்ட முறையில் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயத்திற்கு அடுத்தப்படியாக சுமார் 7 ஆயிரம் ெஹக்டர் பரப்பளவில் கேரட், பீட்ரூட், உருளைகிழங்கு, பூண்டு உள்ளிட்ட மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. நீலகிரியில் விளைவிக்கப்படும் காய்கறிகள் தமிழகத்தின் சென்னை, கோவை, மதுைர உள்ளிட்ட பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா போன்றவைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகளும் வாங்கி செல்கின்றனர்.

இதனிடையே மழையை எதிர்பார்த்து கேரட், பீட்ரூட், பூண்டு போன்றவைகள் பயிரிடப்பட்டு வருகின்றன. ஊட்டி அருகேயுள்ள புதுமந்து, கோழிப்பண்ணை, காந்தி நகர், ஓடைக்காடு, நஞ்சநாடு உள்ளிட்ட பகுதிகளில் படிமட்ட முறையில் காய்கறி பயிர்கள் பயிரிப்பட்டு அவை உரமிட்டு பராமரித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,“தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்பார்த்து நிலங்கள் தயார் செய்யப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த படி பெய்யவில்லை.

இதனால் மோட்டார் பயன்படுத்தி மலைப்பாங்கான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டது. தற்போது, ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பாக உள்ளது’’ என்றனர்.

Related posts

“நீங்கள் நலமா” … கலைஞர் உரிமைத் தொகை முறையாக வந்து சேருகிறது, மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக முதல்வரிடம் பயனாளி பதில்!!

சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்க கடத்தல் விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை

தனியார் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவரை பணிநீக்கம் செய்யாதது ஏன் : உயர்நீதிமன்றம் கேள்வி