ஊட்டி தாவரவியல் பூங்காவில் 500 தொட்டிகளில் சைக்ளோன் மலர்கள் உற்பத்தி: 2வது சீசனுக்கான பணி தீவிரம்

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2வது சீசனுக்காக 500 தொட்டிகளில் சைக்ளோன் மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதற்காக ஆண்டு தோறும் பூங்காவில் முதல் மற்றும் இரண்டாம் சீசனின் போது பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படுகிறது. அதில் பூத்துக் குலுங்கும் மலர்களை சுற்றுலா பணிகள் பார்த்து ரசித்து செல்வது வழக்கம். தற்போது இரண்டாம் சீசனுக்காக பூங்காவை தயார் செய்யும் பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பூங்காவில் உள்ள நர்சரிகளில் விதைப்பு பணிகள் மற்றும் நாற்று உற்பத்தி பணிகள் நடந்து வருகிறது. இதனால், பூங்காவில் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. அதேசமயம், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமல் இருக்க கண்ணாடி மாளிகையில் பல ஆயிரம் தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளது. இதனை சுற்றலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

தற்போது கண்ணாடி மாளிகையில் வைப்பதற்காகவும், இரண்டாம் சீசனின் போது அலங்காரங்கள் செய்வதற்காகவும் பூங்காவில் உள்ள நர்சரியில் 500 தொட்டிகளில் சைக்ளோன் மலர்கள் உற்பத்தி செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த தொட்டிகளில் மலர்கள் பூத்தவுடன் இவைகள் கண்ணாடி மாளிகையிலும் மற்றும் பூங்காவின் பிறப்பகுதிகளிலும் வைக்கப்பட உள்ளன. சில தொட்டிகளில் மலர்கள் பூக்கள் பூக்க துவங்கியுள்ளன.

Related posts

உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கூட்ட நெரிசலில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம்: 6 பேர் கைது

ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வெளிநாடு செல்லும் அண்ணாமலை, கட்சியை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: மக்களவை தேர்தலில் வேலை செய்யாத பாஜ நிர்வாகிகள் மீது நடவடிக்கை