ஊட்டி மரவியல் பூங்காவில் புல் மைதானம் சீரமைக்கும் பணி துவக்கம்

ஊட்டி: ஊட்டி மரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானம் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஊட்டியில் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. குறிப்பாக தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா என ஏராளமான ஊட்டியில் உள்ளன. இதுதவிர தமிழக மாளிகை பூங்காவும் உள்ளது.

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவிற்கு சென்று அங்குள்ள மலர் செடிகளையும் பல்வேறு வகையான மூலிகை செடிகள் மற்றும் பெரணி செடிகளை கண்டு ரசித்துச் செல்கின்றனர். குறிப்பாக கோடை காலங்களில் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால் இச்சமயங்களில் வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்படும்.

இதற்காக ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் பூங்காக்கள் தயார் செய்யும் பணிகள் மற்றும் நடவு பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போது முதல் சீசனுக்காக ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் மரவியல் பூங்கா ஆகியவற்றை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாவரவியல் பூங்காவில் விதைப்பு பணிகள் நடந்துவரும் நிலையில் ஓரிரு நாட்களில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மரவியல் பூங்காவிலும் தற்போது பராமரிப்பு பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகிறது. பூங்காவில் உள்ள பாத்திகள் நடவு பணிகளுக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. மேலும், புல் மைதானங்கள் சீரமைக்கப்பட்டு சமன்செய்யும் பணி துவங்கி நடந்து வருகிறது. நாள்தோறும் இயந்திரங்கள் கொண்டு இந்த பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் தற்போது சமன் செய்யப்பட்டு வருகிறது.

Related posts

ஒரு தமிழன் பிரதமராக பதவியேற்பதற்கு நாட்டை தயார்படுத்த வேண்டும் : கமல்ஹாசன்

மாவட்ட வாரியாக பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகளை கண்காணிக்க குழு

கடந்த 3 ஆண்டுகளில் மருத்துவத்துறை 545 விருதுகள் பெற்று சாதனை: தமிழக அரசு