ஊனைமாஞ்சேரியில் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய கூடம்: பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை

கூடுவாஞ்சேரி: ஊனைமாஞ்சேரியில் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு 7 ஆண்டுகளாக திறக்கப்படாத சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட காரணைப்புதுச்சேரி மற்றும் ஊனைமாஞ்சேரி ஆகிய ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் காரணைப்புதுச்சேரியில் நடந்தது.

இதில், ஊராட்சி மன்ற தலைவர்கள் காரணைப்புதுச்சேரி நளினிஜெகன், ஊனைமாஞ்சேரி மகேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், காட்டாங்குளத்தூர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன், வண்டலூர் தாசில்தார் புஷ்பலதா ஆகியோர் கலந்துகொண்டு ஏராளமான பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

அப்போது, ஊனைமாஞ்சேரி பொதுமக்கள் திரண்டு வந்து கடந்த 2016-2017ம் ஆண்டு செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ நிதியில் ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், 7ஆண்டுகள் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை. எனவே மேற்படி சமுதாய கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தினர்.

Related posts

நடிகை அதிதி ராவுடன் நடிகர் சித்தார்த் திருமணம்

செஸ் ஒலிம்பியாட்; 5வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி வெற்றி

எச்.ராஜாவை கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு