கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல்

டெல்லி: கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். உம்மன் சாண்டி கட்சிகள் கடந்து அனைவராலும் மதிக்கப்பட்டவர். காங்கிரஸ் கட்சிக்கு கேரளாவுக்கும் ஆற்றிய சேவைக்காக அவர் எப்போதும் நினைவு கூறப்படுவார் என்று அவர் தெரிவித்தார்.

கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி(79) உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சுமார் 4.25 மணியளவில் காலமானார். தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த உம்மன் சாண்டி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெர்மனியில் சென்று சிகிச்சை பெற்றார்.

பின்னர் பெங்களூருவில் சின்மயா மருத்துவமனையில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை காலமானார். முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி , கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் உம்மன் சாண்டி மறைவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். “உம்மன் சாண்டி கட்சிகள் கடந்து அனைவராலும் மதிக்கப்பட்டவர், காங்கிரஸ் கட்சிக்கு கேரளாவுக்கும் ஆற்றிய சேவைக்காக அவர் எப்போதும் நினைவு கூறப்படுவார்” என தெரிவித்துள்ளார். கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடல் கர்நாடக அமைச்சர் ஜான் வீட்டில் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது