பாஜ கூட்டணியில் மஜதவுக்கு 2 சீட் தான்: குமாரசாமி அப்செட்

பெங்களூரு: மஜதவுக்கு 3 இடங்களை ஒதுக்க வேண்டும். பாஜவின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் வரை காத்திருப்போம் என முன்னாள் முதல்வர் குமாரசாமி அதிருப்தியுடன் கூறினார். கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணியில் மஜத உள்ளது. கோலார், மண்டியா, ஹாசன் தொகுதியை மஜத கேட்டு வருகிறது. ஆனால் மஜதவுக்கு 2 சீட் ஒதுக்க மட்டுமே பாஜ திட்டமிட்டுள்ளது. இதையறிந்து குமாரசாமி அதிருப்தியில் இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், பாஜ தலைவர்களுக்கு மஜதவின் பலம் நன்றாக தெரியும். மைசூரு, மண்டியா, ஹாசன் உள்ளிட்ட மாவட்டங்களில் மஜத எளிதில் வெற்றி பெறமுடியும். பாஜவில் 2 இடம் கிடைக்கும் என்றால், பிறகு எதற்காக நாங்கள் கூட்டணி அமைக்க வேண்டும். பாஜ கூட்டணியில் நாங்கள் இருப்பதால் 28 தொகுதியிலும் அவர்களுக்குதான் கூடுதல் நன்மை. அதே நேரம் நாங்கள் 8 முதல் 10 டிக்கெட் கேட்கவில்லை. 3 முதல் 4 டிக்கெட் மட்டுமே கேட்கிறோம். பாஜ வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியாகும் வரை நாங்கள் காத்திருப்போம். அதன்பிறகு முடிவு செய்வோம் என்றார்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்