ஆந்திராவில் மீனவர்கள் வலையில் ஒன்றரை டன் தேக்கு மீன் சிக்கியது: சென்னை வியாபாரி வாங்கினார்

திருமலை: ஆந்திராவில் மீனவர்கள் வீசிய வலையில் ஒன்றரை டன் தேக்கு மீன் சிக்கியது. அதனை சென்னை வியாபாரி வாங்கி சென்றார். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், மச்சிலிப்பட்டினம் கில்கலதிண்டி பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் வழக்கம் போல் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் சென்ற அவர்கள் வலை வீசியுள்ளனர். சில மணி நேரத்தில் இந்த வலையில் பிரம்மாண்ட மீன் ஒன்று சிக்கியது. அதனை மீட்க போராடினர் கடும் சிரமத்துடன் போராடி நேற்று கரைக்கு கொண்டு வந்தனர்.

மிக பிரம்மாண்டமாக காணப்பட்ட அந்த மீனை கண்டு மீன்வர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கரைக்கு கொண்டு வந்தபிறகு கிரேன் உதவியுடன் எடைப்போட்டனர். இதில் மீன் ஒன்றரை டன் இருப்பது தெரிய வந்தது. பிடிபட்டது தேக்கு மீன் என்பதும், இது ஆயுர்வேத மருந்து தயாரிக்க பயன்படும் என்பதும் தெரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த வியாபாரிகள் தேக்கு மீனை வாங்க போட்டி போட்டனர். இந்த மீனை சென்னையை சேர்ந்த வியாபாரி ஒருவர் வாங்கி சென்றார்.

 

Related posts

சேலத்தில் 260 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..!!

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: அமைச்சர் சாமிநாதன்

வீடுகள் எரிப்பு விவகாரம்; பீகாரில் பட்டியலினத்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: ராகுல் காந்தி கடும் கண்டனம்