ஒரே நாடு ஒரே தேர்தல் நடக்காது: வைகோ பேட்டி

திருவில்லிபுத்தூர்: இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நாளும் நடக்காது என்றும் அது மக்களை துண்டு துண்டாக்கும் முயற்சி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறினார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே புதுசென்னாகுளம் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், ‘‘தமிழக வெள்ள பாதிப்பிற்கு ஒன்றிய அரசு ரூ.450 கோடி மட்டுமே கொடுத்துள்ளது. ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்கிறது. ஒரு கண்ணில் வெண்ணெய் வைத்துக் கொண்டும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் சுண்ணாம்பை வைக்கும் செயலில் ஈடுபடுகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரு நாளும் நடக்காது. அது மக்களை துண்டு துண்டாக்கும் முயற்சி’’ என்றார்.

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு