பல்லடம் அருகே 4 பேர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருப்பூர்: பல்லடம் அருகே 4 பேர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். 4 பேர் கொலையில் முக்கிய குற்றவாளியான வெங்கடேஷின் தந்தை ஐயப்பனை காவல்துறையினர் கைது செய்தனர். கொலை வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டு, இருவர் சரணடைந்த நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான வெங்கடேஷ், சோனை முத்தையா ஆகியோர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். ஏற்கெனவே செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த இருவர் சரணடைந்தனர். செந்தில்குமார், மோகன், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி