ஒரு கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

 

கரூர், மே 1: கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 10 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, அவர்களிடம் இருந்து 1 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கரூர் மாவட்டம் முழுதும் தொடர்ந்து அந்தந்த காவல் நிலைய போலீசார்களால் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படும் நிகழ்வு குறித்து கண்காணித்து, வழக்கு பதியப்பட்டு, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில், நேற்று முன்தினம் கரூர், பாலவிடுதி, மாயனு£ர், குளித்தலை, வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, பசுபதிபாளையம், வெங்கமேடு ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 10 பேர்கள் மீது வழக்கு பதியப்பட்டு, அவர்களிடம் இருந்து 1 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை