ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது, ஒரே கட்சி ஆளுவதற்காக செயல்படுத்த எடுக்கும் முயற்சி: ஈ.ஆர்.ஈஸ்வரன் கண்டனம்

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது, ஒரே கட்சி ஆளுவதற்காக செயல்படுத்த எடுக்கும் முயற்சி என கொ.ம.தே.க. உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஈ.ஆர்.ஈஸ்வரன்; அரசியல் நோக்கத்திற்காக, ஆட்சியை தக்கவைப்பதற்காகவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டுவரப்படுகிறது. நாடு முழுவதும் தேர்தலை நடத்தும் அதிகாரிகளை பிரதமரே நியமிப்பார் என்றால் ஜனநாயகம் எங்கே இருக்கிறது?. தமிழ்நாடு சட்டமன்றத்தில் உள்ள ஜனநாயகம் நாடாளுமன்றத்தில் எங்கே இருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு