ஓணம் பண்டிகை கேரளாவில் ரூ.116 கோடிக்கு மது விற்பனை

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள் ரூ.116 கோடிக்கு இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகள் விற்பனையாகி உள்ளது. கேரளாவில் விஸ்கி, பிராந்தி, ரம் உள்பட இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மது வகைகள் கேரள மதுபான விற்பனைக் கழகத்தின் சில்லறைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரளா முழுவதும் 320 சில்லறை மது விற்பனைக் கடைகள் உள்ளன. ஓணம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, சித்திரை விஷு உள்ளிட்ட பண்டிகை நாட்களில் தான் மது விற்பனை கேரளாவில் அதிகமாக இருக்கும். ஓணம் பண்டிகை தினமான நேற்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று முன்தினம் அனைத்து கடைகளிலும் மது விற்பனை அமோகமாக இருந்தது. அன்றைய தினம் ஒரே நாளில் ரூ.116 கோடிக்கு மேல் மது வகைகள் விற்பனையாகின. திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலக்குடாவில் ஒரு கடையில் மட்டும் ரூ.1.06 கோடிக்கு விற்பனையானது. இதற்கு அடுத்ததாக கொல்லம் மாவட்டம் ஆஸ்ராமம் பகுதியிலுள்ள ஒரு கடையில் ரூ.1.01 கோடிக்கு மது வகைகள் விற்பனையானது.

Related posts

திருப்பதி அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்ததாக கூறப்படும் செய்தி முற்றிலும் தவறானது: திருமலை தேவஸ்தானம்

ஜாமீனில் வெளி வந்த சீமான் கட்சி பிரமுகர் மேலும் ஒரு வழக்கில் கைது: விடிய விடிய விசாரணை

செங்கோட்டை அருகே வடகரையில் விளைநிலங்களுக்குள் புகுந்த 4 யானைகளை விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு