சுற்றுலா வேன் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இரண்டு பேர் கைது


ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் பல ஆண்டுகளாக சுற்றுலா வேன் வாகன ஓட்டுநர்கள் நலச்சங்கம் செயல்படுகிறது. இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவில் வெளியூரை சேர்ந்த வாகன ஓட்டுனர்கள் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். அப்பகுதியில் இருந்த உள்ளூர் வேன் ஓட்டுனர்கள் சத்தம் போட்டு அங்கிருந்து விரட்டி அனுப்பினர். இதில் மோதல் ஏற்பட்டு கார்த்திக் என்பவரின் தலையில் காயம் ஏற்பட்டது.

நள்ளிரவில் குடிபோதையில் மீண்டும் வேன் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்த வெளியூர் ஓட்டுநர்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன்கள் மீது பெட்ரோல் குண்டை எறிந்து, பெரிய கல்லை தூக்கி போட்டு வேன் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர். இதில் 4 வேன்கள் சேதமடைந்தன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து பெட்ரோல் குண்டு வீசிய உச்சிப்புளியை சேர்ந்த முனீஸ்குமார் (31), காளீஸ்வரன் (30) கைது செய்தனர்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்