குறைவான வரி செலுத்தி மோசடி: ஆம்னி பேருந்து பறிமுதல்


திருத்தணி: குறைவான வரி செலுத்தி மோசடியில் ஈடுபட்டு வந்த காரணத்தால் பொன்பாடி சோதனைச் சாவடியில் ஆம்னி பேருந்தை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆந்திர எல்லை பகுதியில் அமைந்துள்ள பொன்பாடி போக்குவரத்து சோதனைச் சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுமேஷ் நாராயணன் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டார்.

சோதனையின் போது ஆம்னி பேருந்து ஒன்று, இருக்கை விவரங்களை தவறாக அளித்து தமிழ்நாடு அரசுக்கு கடந்த ஓராண்டாக ஆன்லைன் மூலம் குறைவான வரியை செலுத்தி இயங்கியது கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஆம்னி பேருந்தை மோட்டார் வாகன ஆய்வாளர் சுமேஷ் நாராயணன் பறிமுதல் செய்தார்.

Related posts

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் தீர்ப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

வயநாடு நிலச்சரிவு: சூர்யா, ஜோதிகா, கார்த்தி ரூ.50 லட்சம் நிவாரணம்

தமிழகத்தில் இந்தாண்டு இதுவரை 33.14 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: கூட்டுறவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தகவல்